சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் 2-1 செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், இந்தோனேஷியா வீராங்கனை கிரிகோரியா மரிஸ்கா துஞ்சங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
சுவிச்சர்லாந்து, பாசெல் நகரில் சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடைபெற்றது.
அதில் முன்னணி வீராங்கனையான ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரின், இந்தோனேஷியா வீராங்கனை கிரிகோரியா மரிஸ்கா துஞ்சங்கைவுடன் விளையாடினார்.
இந்த போட்டியின் முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா 21 புள்ளிகளை பெற்று 21-19 என்ற புள்ளிக்கணக்கில் இந்தோனேஷியா வீராங்கனை கிரிகோரியா மரிஸ்காவை வீழ்த்தினார்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்தோனேஷியா வீராங்கனை கிரிகோரியா 21 புள்ளிகளை பெற்று 21-13 புள்ளிக்கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவை வீழ்த்தினார்.
பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற 3வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் 22-20 என்ற புள்ளிக்கணக்கில் இந்தோனேஷியா வீராங்கனை கிரிகோரியா மரிஸ்கா துஞ்சங்கை வீழ்த்தினார்.
இதன் மூலம் 2-1 செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், இந்தோனேஷியா வீராங்கனை கிரிகோரியா மரிஸ்கா துஞ்சங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.