உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்நாத் கோவிலில் ஹோலி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசிக்கொண்டு, இனிப்புகளை வழங்கி பிறகு ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோரக்நாத் கோவிலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வண்ணப்பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ,
“கடந்த சில நாட்களாக, நாடு முழுவதும் உள்ள சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் ஹோலி போன்ற பண்டிகையின் மூலம் தங்கள் 1000 ஆண்டுகால பாரம்பரியத்தை மகிழ்ச்சி, புதிய உற்சாகத்தின் உச்சத்திற்கு எடுத்துச் சென்று, இந்த விழாவில் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் பாரம்பரியத்திற்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மக்களையும் எங்கள் ஆர்வத்துடன் இணைத்து, வளமான சமுதாயத்தை நிறுவுவதற்கான செய்தியை இந்த ஷோபா யாத்திரை மூலம் பரப்புகிறோம்.
இந்தச் சந்தர்ப்பத்தில், இந்த ஷோபா யாத்திரை மூலம் வளமான சமுதாயத்தை நிறுவுவோம் என்ற செய்தியை பரப்புகிறோம். சனாதன தர்மம் ‘வசுதைவ குடும்பகம்’ என்று நம்புகிறது” எனத் தெரிவித்தார்.