விருதுநகர் மக்களவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் கவுசிக் தமிழ் படிக்க முடியாமல் தடுமாறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு, புதுவையில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களில் பலரும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இதில், விருதுநகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் கவுசிக் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அப்போது, தேர்தல் உறுதிமொழி பத்திரத்தை வாசிக்க வேண்டும் எனத் தேர்தல் அலுவலர் ஜெயசீலன் தெரிவித்தார். ஆனால், டாக்டர் கவுசிக்கோ எனக்கு தமிழில் பேசத் தெரியும். ஆனால், படிக்கத் தெரியாது என தெரிவித்தார்.
இதனையடுத்து தேர்தல் அலுவலர் ஜெயசீலன், தேர்தல் உறுதிமொழி பத்திரத்தை வாசிக்க அதனை அப்படியே டாக்டர் கவுசிக் வாக்க உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இது நாம் தமிழர் கட்சியினரையும், தேர்தல் அதிகாரிகளையும் அதிர்ச்சி அடைய வைத்தது.