தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. நாளை அதாவது, மார்ச் 27-ம் தேதி வேட்பு மனு செய்ய கடைசி நாளாகும்.
பல்வேறு கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளரான டி.ஆர். பாலு வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் வருகை தந்திருந்தனர்.
வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதி.
இந்த நிலையில், தனது வேட்பு மனுவை டி.ஆர். பாலு தாக்கல் செய்ய முயன்றார். அப்போது, உறுதி மொழி எங்கே என்று கண்டுபிடிக்க முடியாமல் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தடுமாறிக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்தவர் உறுதிமொழி இருந்த இடத்தைக் காட்டினார். பின்னர், உறுதிமொழியை வாசித்தார். உறுதிமொழியை தேடவே அண்ணன் தவிக்கிறார் என்று நிர்வாகிகள் குபீரென சிரிப்பு மழையை பொழியவிட்டனர். இதனால், டிஆர் பாலு முகத்தில் கோபம் தெரிந்தது.