2024 ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.
இந்தத் தொடரின் 7 வது போட்டி நேற்று சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்தது.
இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருத்ராஜ் மற்றும் ரச்சின் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வந்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா 6 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 20 பந்துகளில் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து ருத்ராஜ் 5 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 36 பந்துகளில் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழனத்தார். பின்னர் களமிறங்கிய சிவம் துபே முதல் பந்தில் இருந்து தனது அதிரடியான சிக்சர்களை அடிக்க தொடங்கிவிட்டார்.
சிவம் துபே 2 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 23 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் சமீர் ரிஸ்வி தனது முதல் இரண்டு பந்துகளிலும் சிக்சர்களை பறக்கவிட்டு 14 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
டேரி மிச்சேல் 24 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்தது.
இதை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக தமிழக வீரரான சாய் சுதர்சன் 37 ரன்களை அடித்தார், தொடக்க வீரராக களமிறங்கிய சாஹா 21 ரன்களும், டேவிட் மிச்சேல் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர், முஸ்தபிஸுர் ரஹ்மான், தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அதேபோல் மதீஷா பத்திரனா 1 விக்கெட்டும், டேரி மிச்சேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.