டானாபூரில் இருந்து லோக்மான்ய திலக் டெர்மினஸ் நோக்கிச் சென்ற ஹோலி சிறப்பு ரயிலில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அதிஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
பீகார் மாநிலத்தில் உள்ள போஜ்புரில், நேற்று இரவு ஆராஹ் சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து மும்பை எல்எல்டி நோக்கி இயக்கப்பட்ட சிறப்பு இரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் வந்தவர்கள் மீண்டும் பணியிடத்திற்கு திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
அதன் சிறப்பு இரயில் ஆராஹ் இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிலமணித்துளிகளில், கரிசத் இரயில் நிலையம் அருகே இரயிலின் பெட்டி எண் எம்-9ல் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து, இரயில் பயணிகள் அனைவரும் அபாயசங்கிலியை பிடித்து இழுத்து அவசர கதியில் ரயிலில் இருந்து இறங்கி உயிர்தப்பினார்.
நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.
பயணிகள் அனைவரும் மாற்று இரயிலில் மீண்டும் தங்களின் பயணத்தை தொடங்கினர். இதனால் அவ்வழித்தடத்தில் நேற்று இரவு 5 இரயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த இரயில்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.