“அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற இந்திய சுகாதாரத் துறையின் தாரக மந்திரத்திற்கு ஏற்ப கடந்த 10 ஆண்டுகளில் இந்திய சுகாதாரத் துறை பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் எந்த முன்முயற்சியும், தூய்மை இயக்கத்தை உள்ளடக்கியே உள்ளது.
இந்திய சுகாதாரத் துறை கடந்த 10 ஆண்டுகளாக மறுசீரமைக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த சுகாதாரத்தின் கோட்பாடுகள் குறித்து பார்ப்போம்.
1. சுகாதாரத்தில் கவனம் செலுத்துதல்
2. சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு
3. புதுமையான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு
1. சுகாதாரத்தில் கவனம் செலுத்துதல் :
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான அவுட்-ஆஃப்-பாக்கெட் செலவினங்களை (OOPE) குறைக்க, காப்பீட்டுத் தொகை வழங்குவதிலும் மற்றும் அவர்களுக்கு தேவையான பிற நன்மைகளை மேம்படுத்துவதிலும் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆயுஷ்மான் பாரத் :
2018 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா தொடங்கப்பட்டது. இது 100 மில்லியனுக்கும் ஆண்டுக்கு அதிகமான குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.
2022 டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி, மொத்தம் ரூ. 21.24 கோடி ஆயுஷ்மான் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 4.22 கோடி பேர் இந்த திட்டத்தின் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
2. சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு :
இதன் மூலம் மருத்துவமனை படுக்கைகள் உட்பட சுகாதார வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2020 மார்ச் மாதம் நிலவரப்படி இந்தியாவில் பொது சுகாதார வசதிகளில் 1,57,921 துணை மையங்கள் (SCs), 30,813 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5,649 சமூக சுகாதார மையங்கள், 1193 துணை-பிரிவு மருத்துவமனைகள், 810 மாவட்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசாங்கம் பதவியேற்றவுடன், சுகாதார வசதிகளுக்கான தேசிய தர உத்தரவாத கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதேபோல் காயகல்ப் என்ற புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டில் உள்ள தூய்மையான மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் ‘காயகல்ப்’ விருது வழங்கப்பட்டு வருகிறது.
புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு மையங்கள் :
இதன் மூலம் பிரசவத்தில் புதிதாக பிறந்த குழந்தைளுக்கு தேவையான பராமரிப்பு செய்யப்படுகிறது. மேலும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக, நாடு முழுவதும் சிறப்புப் குழந்தை பராமரிப்புப் பிரிவுகள் (SNCUs) தொடங்கப்பட்டன.
இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தரமான பொது மருந்துகள் நியாயமான விலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் தொடங்கப்பட்டது.
கோவிட்-19 தடுப்பூசி :
2020 ஆம் ஆண்டு பூமியை நோக்கி வந்த பெரிய ஆபத்தான கொரோனா வைரஸை எதிர்கொள்ள உலகமே பயந்திருந்த சமயத்தில் துணிச்சலாக அந்த சவாலை கையில் எடுத்து அசுர வேகத்தில் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களை காற்றியது இந்திய அரசாங்கம். மேலும் 150 நாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.
மருத்துவ கல்லூரிகளின் வளர்ச்சி :
சுகாதாரத்திற்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 9 ஆண்டுகளில் இந்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் MBBS இடங்களின் எண்ணிக்கையை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது.
2014 ஆம் ஆண்டில் வெறும் 387 மருத்துவக் கல்லூரிகளே இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் 78 சதவீதமாக ஆக உயர்ந்து 689 மருத்துவ கல்லூரிகளாக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் 7 ல் இருந்து 22 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகள் மட்டுமல்ல, எம்பிபிஎஸ் ( MBBS ) இடங்களின் எண்ணிக்கை 105% உயர்ந்துள்ளது , 2014 ஆம் ஆண்டு 51,300 ஆக இருந்த இடங்கள் 2023 ஆம் ஆண்டில் 1,05,383 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவை காட்டிலும் இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
3. புதுமையான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு :
இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது மத்திய பாஜக அரசாங்கத்தின் முக்கிய கட்டாயமாகும். தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் (NDHM) மற்றும் நேஷனல் டிஜிட்டல் ஹெல்த் ப்ளூபிரிண்ட் (NDHB) ஆகியவற்றின் அறிமுகம் இந்தப் பயணத்திற்கு முக்கிய உதவியாக உள்ளது.
இந்தியாவில் வளர்ந்து வரும் இணையத்தின் உதவியுடன், டிஜிட்டல் சுகாதாரத் துறையானது 2021 ஆம் ஆண்டு ரூ. 524.97 பில்லியனில் இருந்து 2027 ஆம் ஆண்டுக்குள் ரூ. 2528.69 பில்லியனாக வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெலிமெடிசின் ( Tele medicine ) – டிஜிட்டல் தளங்கள், மொபைல் பயன்பாடுகள் மற்றும் AI ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு ஆகியவை கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு மருத்துவ சேவைகளை மேம்படுத்த வழிவகுத்தன.
இந்தியாவில், 90% இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார வசதிகள் 68% மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களுக்கு கிடைக்காமல் இருந்தது. இந்த டெலிமெடிசின் திட்டமானது கிராமப்புறங்களுக்கும் அந்த தரமான மருந்துகள் கிடைக்க உதவியது.
கில்காரி : கில்காரி திட்டமானது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த தயாரிக்கப்பட்டது. இது கர்ப்பிணிப் பெண்களின் மொபைல் போன்களுக்கு நேரடியாக செய்திகளையும் ஆலோசனைகளையும் குரல் வழியில் வழங்கும்.
இன்றைய மத்திய அரசின் அனைத்து சாதனைகளிலும், சுகாதாரம் ஒரு ஒளிரும் நட்சத்திரமாக மின்னுகிறது. இந்தியா கடந்த காலங்களில் சுகாதாரத்துறையில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. நம் வாழ்க்கை ஆரோக்கியமான அமைய நம் உடல் ஆரோக்கியம் அவசியம். இதை நம் பாரத பிரதமர் மோடியின் அரசு வழங்கி வருகிறது.