மியாமி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் ஜான் பேட்ரிக் இணை முன்னேறியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டனுடன் இணைந்து பங்குபெற்றுள்ளார்.
இவர்கள் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரரான மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் அர்ஜென்டினா வீரரான ஹோராசியோ ஜெபலோஸ் இணையுடன் விளையாடினர்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் இணை அபாரமாக விளையாடி வந்தது.
இந்த போட்டியில் முதல் சுற்றில் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியா வீரரான ஜான் பேட்ரிக் இணை 6 புள்ளிகளை பெற்று 6-1 என்ற கணக்கில் ஸ்பெயின் வீரர் மார்செல், அர்ஜென்டினா வீரர் ஹோராசியோவை வீழ்த்தியது.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியா வீரரான ஜான் பேட்ரிக் 6 புள்ளிகளை பெற்று 6-4 என்ற கணக்கில் ஸ்பெயின் வீரர் மார்செல், அர்ஜென்டினா வீரர் ஹோராசியோவை வீழ்த்தியது.
இதன் மூலம் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் ஜான் பேட்ரிக் இணை 2-0 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் மார்செல், அர்ஜென்டினா வீரர் ஹோராசியோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.