கடந்த ஐந்து ஆண்டுகளில் டி.ஆர். பாலுவின் சொத்து மதிப்பு சுமார் 350% உயர்வு! - அண்ணாமலை
Nov 5, 2025, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் டி.ஆர். பாலுவின் சொத்து மதிப்பு சுமார் 350% உயர்வு! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Mar 29, 2024, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளைக் கட்டி அணைத்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், சென்னை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

அந்தவகையில்  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்  V.N.வேணுகோபாலை ஆதரித்து சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்ககோரி ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொது மக்கள் மத்தியில் மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

திமுக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் டி.ஆர்.பாலு வேண்டாம் என ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டனர் என்பதை உணர்த்துகிறது. மத்தியில், மீண்டும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், வேணுகோபால்  வெற்றி பெற்றால், ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்து, தொகுதிக்குத் தேவையான திட்டங்களைப் பெற்றுத் தருவார். மற்ற கட்சிகளால் அது முடியாது. எனவே, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், சைக்கிள் சின்னத்தைத் தவிர, மற்ற கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் பயனற்றவை.

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், நமது நாடு உலகப் பொருளாதார வரிசையில், 11 ஆம் இடத்திலிருந்து, 5 வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 3 வது இடத்தைப் பிடிக்கும். நாடு முழுவதும், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி முத்ரா கடனுதவி, 45 லட்சம் விவசாயிகளுக்கு வருடம் 6,000 ரூபாய் என ஐந்து ஆண்டுகளில் ரூ.30,000, உஜ்வாலா திட்டம் மூலம் 40 லட்சம் பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என, அனைத்துத் தரப்பு மக்களுக்கும், நமது மத்திய அரசு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

ஆனால் திமுக, மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கி, இந்தியாவில் அதிகக் கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருக்கிறது. குடிநீர் வரி, சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு, என சாமானிய மக்களைப் பாதிக்கும் வகையில் அத்தனை வரிகளையும் உயர்த்தியிருக்கிறது. தங்கள் நிலங்களைப் பாதுகாக்கப் போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு போட்டது, அனைத்து மகளிருக்கும் மாதம் ரூபாய்.

1,000 என்று கூறி, 70% மகளிருக்குத் தகுதி இல்லை என்று மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் புறக்கணித்தது, நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவோம் என்று கூறி விவசாயிகளை ஏமாற்றியது, கல்விக் கடன் தள்ளுபடி என்று மாணவர்களை ஏமாற்றியது, 100 நாள் வேலைத் திட்ட நாட்களையும் ஊதியத்தையும் அதிகப்படுத்துவோம் என்று பொய் வாக்குறுதி கொடுத்தது என, பொதுமக்களை ஏமாற்றுவதற்காகவே கோபாலபுரக் குடும்பம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், டி.ஆர். பாலுவின் மனைவியுடைய சொத்து மதிப்பு ரூ.97 லட்சத்தில் இருந்து, ரூ.4.42 கோடியாக, சுமார் 350% உயர்ந்திருக்கிறது. இதுதான் டி.ஆர். பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்காக செய்த ஒரே பணி.

கடந்த 2021 ஆம் ஆண்டு கொடுத்த 595 தேர்தல் வாக்குறுதிகளில், 20 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், தற்போது மீண்டும் பொய் சொல்லியிருக்கிறது திமுக. நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல், நாட்டுக்கான தேர்தல். நாட்டின் பாதுகாப்புக்கான தேர்தல். ஆனால், இதே ஸ்ரீபெரும்புதூர் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளைக் கட்டி அணைத்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின்.

திமுக இந்தத் தேர்தலை தமிழகத்துக்கான சட்டமன்ற தேர்தல் போல பேசிக் கொண்டிருக்கிறது. அதிமுக, இதனை கவுன்சிலர் தேர்தல்போல பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசிடம் நேரடியாகப் பேசி திட்டங்களைக் கொண்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் நமது தேவை. அடுத்த இருபது நாட்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும், தங்கள் சொந்தக் கட்சிக்காக உழைப்பது போல கடுமையாக உழைத்து, எளிமையான, நமக்காகப் பணி செய்யும் பாராளுமன்ற உறுப்பினராக அண்ணன் வேணுகோபால் அவர்களை சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகத்தின் அரசியலை மாற்றிய சைக்கிள் சின்னம், ஸ்ரீபெரும்புதூர் அரசியலையும் மாற்றப் போவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaitr balu dmk
ShareTweetSendShare
Previous Post

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத விவகாரம் : காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1700 கோடி அபராதம்!

Next Post

குடும்பத்தினருடன் விமானத்தில் இருந்து உயிர் தப்பிய ஸ்பெயின் பிரதமர்!

Related News

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஏற்காடு அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை – பெற்றோர் புகார்!

நாமக்கல் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடல் – குறைகளை கேட்டறிந்தார் நயினார் நாகேந்திரன்!

மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

பொற்கோயிலில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வழிபாடு!

திராவிட கொள்கைகளை காப்பதற்காகத் திமுகவில் இணைந்தேன் – மனோஜ் பாண்டியன்

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies