ஸ்பெயின் நாட்டுப் பிரதமர் தனது குடும்பத்தினருடன் விமானத்தில் சென்ற போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
ஸ்பெயின் நாட்டில் பிரதமரான பெட்ரோ சான்செல் ஈஸ்டர் பண்டிகையின் விடுமுறையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கத் திட்டமிட்டு ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அவர் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இருந்து சிறிய ரக விமானம் மூலம் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டுள்ளார். ஆனால் அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
உடனே அந்த விமானத்தின் விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அந்த விமானம் மீண்டும் மாட்ரிட் விமான நிலையதில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அங்குத் தயாராக இருந்த மீட்புப் படையினர் ஸ்பெயின் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பத்திரமாக வெளியே கொண்டுவந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வேறு விமானம் மூலம் டோனானா தேசிய பூங்காவிற்குச் சென்றனர்.
இதுகுறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாற்றால் விமானத்தின் இஞ்ஜின் செயலிழந்தது தெரிய வந்தது.
மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.