பால்வெளியில் மிகப்பெரிய கருந்துளைகள் கண்டுபிடிப்பு!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பால்வெளியில் மிகப்பெரிய கருந்துளைகள் கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Mar 29, 2024, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லண்டன் பல்கலைக்கழக கல்லூரி பால்வெளியின் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்த படத்தின் மூலம் பால்வெளி அண்டத்தின் மிகப்பெரிய கருந்துளையின் Sagittarius A* என்ற மையப் பகுதி உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் முதல் முறையாகப் பால்வீதியின் மையத்தில் இருக்கும் பிரம்மாண்டமான கருந்துளை மற்றும் அதன் காந்தப்புல அமைப்பு பற்றித் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே ஹபுள், ஜேம்ஸ்வெப் ஆகிய தொலைநோக்கிகள் மூலம் எடுக்கப்பட்ட பால்வெளி படங்களிலிருந்து மாறுபட்டிருக்கும் இந்தப் புதிய படங்கள் ஈவன்ட் ஹாரிசன் தொலைநோக்கி (Event Horizon Telescope) மூலம் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த படங்கள் மூலம் அனைத்து கருந்துளைகளும் இதேபோன்ற வலுவான காந்தப்புலங்களைக் கொண்டிருக்கலாம் என்ற சாத்தியத்தையும் உருவாக்கியுள்ளது. இந்தக் கருந்துளை பூமியிலிருந்து சுமார் 27,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், இந்த கருந்துளைகள் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட பண்புகளைக் கொண்டுள்ளனவா என்று ஆராய்ச்சி செய்யவும் முயன்றுள்ளனர்.

M87 என்ற இந்த கருந்துளையைச் சுற்றியுள்ள ஒளி பற்றிய முந்தைய ஆய்வுகள், காந்தப்புலங்கள் கருந்துளைக்குள் பொருட்களைச் செலுத்தப் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்துள்ளன.

இது Sagittarius A* க்கும் பொருந்தும் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது. இது கருந்துளைகள் வாயு மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பொருட்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்றும் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பேசிய ஆராய்ச்சி இணை ஆசிரியர் ஜிரி யூன்சி, “நமது விண்மீன் மண்டலத்தின் இதயத்தில் உள்ள கருந்துளையின் படங்களை முதல் முறையாகப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இதன் மூலம் கருந்துளையைச் சுற்றியுள்ள காந்தப்புலங்களைப் பற்றிய பல தகவல்கள் தெரியவருகின்றன.

ஒளி என்பது ஒரு ஊசலாடும் மின்காந்த அலையாகும். இந்தக் கருந்துளைகளைச் சுற்றியுள்ள பிளாஸ்மா காந்தப்புலங்களைச் சுற்றிச் சுழலும் துகள்களைக் கொண்டது.

இது கருந்துளை பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய உதவுகிறது. காந்தப்புலக் கோடுகளை வரைபடமாக்கவும் அனுமதிக்கிறது” என்று கூறினார்.

Tags: Discovery of the largest black holes in the Milky Way!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் விரைவில் புல்லட் ரயில்! – வீடியோ வெளியிட்ட ரயில்வே அமைச்சர்!

Next Post

 சி-விஜில் செயலியில் 79,000 விதிமீறல் புகார்கள் பதிவு! – தேர்தல் ஆணையம்

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies