2024 ஐபிஎல் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி!
Oct 17, 2026, 08:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி!

Murugesan M by Murugesan M
Mar 30, 2024, 11:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இந்தத் தொடரின் 9 வது போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 4 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 83 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ஃபாஃப் டு பிளெசிஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, கேமரூன் கிறீன் 33 ரன்களும், கிளென் மாக்ஸ்வெல் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதேபோல் சுனில் நரேன் 1 விக்கெட் வீழ்த்தினார். இதை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபில் சால்ட் 30 ரன்களும் மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரேன் 2 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 3 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 50 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் 17-வது ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயக விருது 47 ரன்களும், 1 விக்கெட்டும் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் சுனில் நரேன்னுக்கு வழங்கப்பட்டது.

Tags: ipl 20242024 IPL: Kolkata Knight Riders win!
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! – அண்ணாமலை

Next Post

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு!

Related News

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies