சென்னை மெட்ரோ இரயில் கட்டுமான பணியின் காரணமாக, OMR சாலையில் இன்று முதல் ஒரு வாரக் காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தினர் தனது கட்டுமான பணியினை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் கந்தன்சாவடி சாலையில் மேற்கொள்ள உள்ளதால், பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது இன்று முதல் ஒரு வாரக் காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.
அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் வேளச்சேரி நோக்கி SRP சந்திப்பில் வலதுபுறம் திரும்பத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்கள் YMCA முன்பு புதிய திருப்பம் செய்து SD சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி தங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம் என்று சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.