பெண்களை கல்லால் அடித்துக் கொல்லும் சட்டம் - தலிபான்கள் அறிவிப்பு!
Aug 20, 2025, 10:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களை கல்லால் அடித்துக் கொல்லும் சட்டம் – தலிபான்கள் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Mar 30, 2024, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானில் முறையற்ற தொடர்புகளில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்து கொல்லும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படுவதாக தலிபான்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு சர்வதேச மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்கள், இனி தங்கள் நாட்டில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கசையடி கொடுத்தல், கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர்.

அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பாதுகாக்கப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர்.

ஆனால், தலிபான்களின் ஆட்சி அப்படி நடைபெறவில்லை. அங்கு தற்போது வறுமையும், பசியும், நோயும் மட்டுமே மிஞ்சியுள்ளது.

எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று பெயரை மட்டுமே அவர்களால் மாற்ற முடிந்ததே தவிர ஆட்சி மாற்றத்தினால் ஆக்கபூர்வமாக நாட்டிற்கு எதுவும் செய்ய முடியவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில், அரசு தொலைக்காட்சியில் தலிபான் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்ஸதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், பெண்களுக்கு பொது இடத்தில் வைத்து கசையடி, கல்லடி வழங்கும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வரும் எனக் கூறியுள்ளார்.

அதில் ‘சர்வதேச சமூகம் ஆப்கன் பெண்களின் உரிமைகள் பற்றி பேசி வருகின்றன. அது ஷாரியத் சட்டத்துக்கு எதிரானது. பெண்களைக் கல்லால் அடித்துக் கொன்றால் அது பெண் உரிமைக்கு எதிரானது என நீங்கள் கூறுகிறீர்கள்.

ஆனால், விரைவில் நாங்கள் அதை நடைமுறைப்படுத்தப் போகிறோம். திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களை நாங்கள் கல்லால் அடித்தும், கசையடி கொடுத்தும் கொல்லும் நடைமுறையைக் கொண்டு வரப் போகிறோம்.

பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்படும். காபூலைக் கைப்பற்றியதோடு தலிபான்களின் வேலை முடிந்துவிடவில்லை. இப்போதுதான் அது தொடங்கியுள்ளது” என்று கூறினார்.

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் அங்கு பெண்களின் நிலை மிக மோசமடைந்துள்ளது. ஆட்சியப் பிடித்தவுடனேயே உயர்க் கல்வி பயில பெண்களுக்குத் தடை விதித்தனர். பின்னர் பணியிடங்கள், பொது இடங்களில் பெண்களுக்கு படிப்படியாகத் தடைகள் விதித்தனர்.

அதேபோல் ஐ.நா. அறிக்கையின் படி உலகளவில் ஆப்கானிஸ்தானில் தான் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இது தொடர்ந்தால் அங்கு பாலின பேதம் உச்சம் தொடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கே பெண்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் தற்கொலை விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்றும் ஐநா அறிக்கை கூறுகின்றது.

இந்நிலையில் தற்போது தலிபான்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு சர்வதேச மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Tags: The law of stoning women to death - Taliban announcement!
ShareTweetSendShare
Previous Post

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்?

Next Post

வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: விசிக நிர்வாகிகள் மோதல் – சிதறி ஓடிய கூட்டணிக் கட்சியினர்!

Related News

ரீல்ஸ் மோகத்தில் ஆழமான பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லும் இளைஞர்கள்!

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies