கடலூர் மாவட்டம் திட்டக்குடியில், காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், விசிக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரகாஷ் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திட்டக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் தலைமை வகித்தார்.
அப்போது, மேடையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் இடையே, கோஷ்டி மோதல் ஏற்பட்டது. திமுக அமைச்சர் முன்னிலையில் தள்ளு, முள்ளு நடைபெற்றது. காவல்துறையினர் சமாதானம் செய்ய முயற்சித்தும் அதை பொருட்படுத்தாமல், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
விசிக நிர்வாகிகள் நாற்காலிகளை வீசி ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டனர். இந்த மோதல் சம்பவத்தால், கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டணிக் கட்சியினர் சிதறி ஓடினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.