டெல்லி ஜல் போர்டு (குடிநீர் வாரியம்) ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில், ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி குடிநீர் வாரியத்தில் முன்பு தலைமை பொறியாளராக இருந்த ஜகதீஷ் குமார் அரோரா விதிமுறைகளை மீறி ரூ.38 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை என்கேஜி இன்ப்ரா நிறுவனத்துக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்காக அவர் பெற்ற லஞ்சப் பணத்தை ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி ஜல் போர்டு (குடிநீர் வாரியம்) ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில், முதல் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், நான்கு தனிநபர்கள் மற்றும் ஒரு நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் தலைமை பொறியாளர் ஜகதீஷ் குமார் அரோரா, ஒப்பந்ததாரர் அனில் குமார் அகர்வால், முன்னாள் என்பிசிசி பொது மேலாளர் டிகே மிட்டல், தேஜிந்தர் சிங் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.