புதியவகை மோசடி : தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை!
Mar 16, 2026, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதியவகை மோசடி : தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Mar 30, 2024, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகமே நவீன மையமாகிய இன்றைய காலகட்டத்தில் மோசடிகளும், கொள்ளைகளும் நவீன மயமாகவே அரங்கேறி வருகிறது.

அந்த மோசடிகளை தடுக்க பாரத பிரதமர் மோடியின் அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தொலைத்தொடர்புத் துறை பாரத மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி உங்களது தொலைபேசி எண்ணை துண்டித்து விடுவோம் என கூறி யாரேனும் தொலைபேசியில் அழைத்து மிரட்டினால் பயப்பட வேண்டாம் என்றும் புகார் தெரிவிக்குமாறும் தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

ஒரு சில மோசடி கும்பல் தொடர்பு துறையினர் பேசுகிறோம் என்று கூறி பொது மக்களுக்கு வாட்சப் எண் வழியாகவோ, செல்போன் எண் வழியாக அழைக்கின்றனர்.

பின்னர், உங்களுக்கு வரும் செல்போன் அழைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் என்றும் உங்களது செல்பேசி எண்கள் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பின்னர், இது தொடர்பாக பேசி பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர் என்பது தொடர்பாக தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறைக்கு புகார் வந்துள்ளது.

மேலும் அரசு அலுவலர்கள் என்று ஆள்மாறாட்டம் செய்து ,மக்களை ஏமாற்ற வெளிநாட்டு செல்போன் எண்களிலிருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகள் குறித்தும் தொலைத் தொடர்புத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

சில தருணங்களில் காதல் போன்ற ஆசை வார்த்தைகள் கூறியும் ஏமாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆகையால், இது போன்ற அழைப்புகளை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள், சைபர் குற்றம் நிதி மோசடிகளை செய்ய அச்சுறுத்தவும் தனிப்பட்ட தகவல்களை திருடவும் முயற்சிக்கின்றனர்.

மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தெரியாத எண்களிலிருந்து வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவோ அல்லது வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ, இந்த எண்களுக்கு, எந்த தனிப்பட்ட விவரங்களையும் +92…… என்ற முதலெழுத்துக்களுடன் வரும் நபர்களுக்கு பகிரவோ வேண்டாம் என்று தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தல் செய்தியில் மக்களை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை அறிக்கையில், ” தொலைத்தொடர்பு துறையினர் யாருக்கும் இதுபோன்ற அழைப்பைச் செய்ய அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தலகள் வழங்குகிறோம்” என்று கூறியுள்ளது.

மேலும், இதுபோன்ற அழைப்புகளைப் பெறும்போது எந்தத் தகவலையும், பணம் உள்ளிட்டவற்றை அனுப்புவதோ, ஏடிஎம் அட்டையின் எண்ணையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதுபோன்ற மோசடி தகவல்தொடர்புகளை சஞ்சார் சாத்தி போர்ட்டலின் (www.sancharsaathi.gov.in) சந்தேகத்திற்குரிய மோசடி தகவல் தொடர்புகள்’ என்ற பிரிவில் புகார் அளிக்குமாறு தொலைத்தொடர்பு துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், குடிமக்கள் தங்கள் பெயரில் உள்ள செல்போன் இணைப்புகளை சஞ்சார் சாத்தி போர்ட்டலின் (www.sancharsaathi.gov.in) ‘உங்கள் செல்பேசி இணைப்புகளை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற பகுதியில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிக்கு ஆளாகியிருந்தால் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளிக்குமாறு தொலைத் தொடர்புத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Tags: New type of fraud: Telecom sector alert!
ShareTweetSendShare
Previous Post

டெல்லி குடிநீர் வாரிய முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Next Post

ஆ.ராசா கார் சோதனை விவகாரம் – பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies