சென்னை சென்ட்ரல் – கோவை இடையே, வரும் 31 மற்றும் 1-ஆம் தேதிகளில், சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோவையில் இருந்து நாளை இரவு 11:30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06550) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில் கூடுதல் நிறுத்தமாக பெரம்பூரில் நின்று செல்லும்.
இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 1-ஆம் தேதி புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06049) அதே நாள் இரவு 8:25 மணிக்கு கோவை ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.