பெண்களை அவமதித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு சாய்னா நேவால் பதிலடி!
Aug 19, 2025, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களை அவமதித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு சாய்னா நேவால் பதிலடி!

Web Desk by Web Desk
Mar 30, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. சாமனூர் சிவசங்கரப்பா பாஜக பெண் வேட்பாளரை அவமதித்து பேசியதற்கு பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. சாமனூர் சிவசங்கரப்பா . இவர், பெண்கள் பற்றி இழிவாக பேசிய சர்ச்சை கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம் தாவங்கரே நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சித்தேஸ்வராவின் மனைவி காயத்ரி சித்தேஸ்வரா என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார்.

கர்நாடகா தாவங்கரே தொகுதியில் காங்கிரஸ் கூட்டத்தின் போது பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. சாமனூர் சிவசங்கரப்பா,

இங்குள்ள பிரச்சனைகள் குறித்து அவர்களுக்கு என்ன தெரியும்? நாம் இந்த பகுதிக்காக நிறைய உழைத்திருக்கிறோம். கடுமையாக பாடுபட்டிருக்கிறோம். அதுவே நமக்கு வெற்றி தேடித் தரும். ஆனால், அவர்களுக்கு என்ன தெரியும்? சமையல்கட்டின் நின்று கொண்டு சமையல் செய்ய மட்டுமே தெரியும். அவர்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்பது போன்று பேசியுள்ளார்.

இப்படி பெண் வேட்பாளரை அவமதித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சாமனூர் சிவசங்கரப்பாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவரை விமர்சித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் , காங்கிரஸ் எம்எல்ஏவின் கருத்துக்கு பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” பெண்கள் சமையலறையில் மட்டுமே இருக்க வேண்டும். இதுவே கர்நாடக முன்னணி தலைவர் சாமனூர் சிவசங்கரப்பா கூறியது.

பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசும் ஒரு கட்சி, தாவங்கரே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காயத்திரி சித்தேஸ்வராவை பாலின ரீதியாக அவமதித்திருக்கிறது. இதை எதிர்பார்க்கவில்லை.

“Woman should be restricted to the kitchen"- This is what a top Karnataka leader Shamanur Shivashankarappa ji has said . This sexist jibe at @bjp4india candidate from Davanagere Gayathri Siddeshwara ji is least expected from a party that says Ladki Hoon Lad Sakti Hoon

When I…

— Saina Nehwal (@NSaina) March 30, 2024

மைதானத்தில் நான் பாரதத்திற்காக பதக்கங்களை வென்றபோது, ​​நான் என்ன செய்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்பியிருக்கும்? எல்லா பெண்களும், தாங்கள் விரும்பும் துறையில் சாதிக்க வேண்டும் என்று கனவு காணும் போது ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்.

ஒரு புறம் பெண் சக்திக்கு தலைவணங்குகிறார்கள். நமது பிரதமர் மோடி தலைமையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மற்றொரு புறம், பெண்களை அவமதிக்கிறார்கள். பெண்கள் மீது வன்மத்தை கக்குகிறார்கள். உண்மையிலேயே வருத்தமளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

Tags: Saina Nehwal responds to Congress MLA who insulted women!
ShareTweetSendShare
Previous Post

நியூஸ்க்ளிக் மீது 8,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

Next Post

மீனவர்களுடன் சேர்ந்து வலையை இழுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

Related News

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies