நாகை மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் எஸ்.ஜி.எம்.ரமேஷ், அப்பகுதி மீனவர்களுடன் சேர்ந்து வலையை இழுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்களவைத் தேர்தல், நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, வேட்பாளர்கள், மக்களிடம் நேரடியாக சென்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும், எஸ்.ஜி.எம்.ரமேஷ் அப்பகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், அப்பகுதி மீனவர்களுடன் சேர்ந்து வலையை இழுத்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை முழுமையாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.