ஐபிஎல் கிரிக்கெட் : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி !
Mar 15, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி !

Murugesan M by Murugesan M
Mar 31, 2024, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் 11 வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீழ்த்தியது .

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இந்தத் தொடரின் 10 வது போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய குவின்டன் டி காக் 5 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என  38 பந்துகளில் 54 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க மார்கஸ் ஸ்டோய்னிஸ் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 3 சிக்சர் மற்றும் 3 பௌண்டரீஸ் அடித்து  42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய குருனால் பாண்டியா 43 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக சாம் கரண் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல் அர்ஷீத் சிங் 2 விக்கெட்களும், ரபாடா மற்றும் ராகுல் சஹர் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதில் அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 7 பௌண்டரீஸ், 3 சிக்சர் என  50 பந்துகளில் 70 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவ் 3 சிக்சர் மற்றும் 3 பௌண்டரீஸ் என  42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க லியம் லிவிங்ஸ்டன் 28 ரன் எடுத்து ஆட்டமிழக்கமல் இருந்தார். இருப்பினும் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் இலக்கை எட்ட முடியவில்லை.

லக்னோ அணியில் அதிகபட்சமாக க்னோ இளம் வீரர் மயங்க் யாதவ், வீசிய 24 பந்துகளில் 18 பந்துகளை மணிக்கு 145 கி.மீ வேகத்திற்கு மேல் வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல் குருனால் பாண்டியா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனால் லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்திய மயங்க் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Tags: iplLSGPBKSlucknow won
ShareTweetSendShare
Previous Post

அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் : போட்டியின்றி தேர்வான 10 பாஜக வேட்பாளர்கள்!

Next Post

முன்னாள் எம்.பி. மாஸ்டர் மதனிடம் ஆசி பெற்ற எல்.முருகன்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies