அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
அமெரிக்காவின் புளோரிடா நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டனுடன் இணைந்து பங்குபெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் போட்டியில் இந்த ஜோடி குரோஷிய வீரர் இவான் டோடிக் மற்றும் அமெரிக்க வீரர் ஆஸ்டின் க்ராஜிசெக் ஆகியோருடன் விளையாடினர்.
இந்த போட்டியில் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணையை, 6-7 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் இவான் டோடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் க்ராஜிசெக் வீழ்த்தினர்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டன் ஜோடி 6 புள்ளிகளை பெற்று 6-3 என்ற புள்ளிகணக்கில் இவான் டோடிக், ஆஸ்டின் ஜோடியை வீழ்த்தினர்.
இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்றது. பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்றி போட்டி நடைபெற்றது. அதில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டன் ஜோடி 10 புள்ளிகளை பெற்று 10-6 என்ற புள்ளி கணக்கில் இவான் டோடிக், ஆஸ்டின் ஜோடியை வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மியாமி ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.