அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் ( Indianapolis) நகரில் , இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, நடந்த துப்பாக்கி சூட்டில், 7 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணம். . இதனால், கல்வி நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் பகுதியில், ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூட்டில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 7 பேர் காயமடைந்தனர்.
வணிக வளாகத்திற்கு வெளியே, நேற்று நள்ளிரவில் இருதரப்பினருக்கிடையே, மோதல் ஏற்பட்டது. அப்போது, திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது. சத்தம் கேட்டு, ரோந்து போலீசார் அங்கு விரைந்தனர். அதற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.