கள்ளக்குறிச்சி அருகே பறக்கும்படை அதிகாரிகளின் சோதனையில், திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் கார் சிக்கியதால் அக்கட்சியினர் பதற்றம் அடைந்தனர்.
வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் உள்ள திமுகவினரிடம் தேர்தல் அதிகாரிகள், போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் மென்மையான போக்கை கடைபிடிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக, திமுக அமைச்சர் எ.வ.வேலு காரில் சென்றார். இதனை கவனித்த பறக்கும்படையினர், எ.வ.வேலுவின் காரை தடுத்து நிறுத்தி, சல்லடை போட்டுச் சோதனை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.