கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, புத்தரச்சல், கெங்கநாயக்கன் பாளையம், கொடுவாய், அவிநாசிபாளையம் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்று சொல்வார்கள். கொங்கு பகுதி வறண்டு போவதைத் தடுக்க, ஆனைமலை – நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்தவும், விவசாயிகள் பிரச்சினைகள், நெசவாளர்கள் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கவும், 7,000 கோடி ரூபாய் நிதியில், கரூர் – கோவை ஆறு வழிச் சாலைப் பணிகளை வேகப்படுத்தவும், விவசாயப் பொருள்களுக்கு குளிர்பதனக் கிடங்கு வசதி அமைத்துத் தரவும், பேருந்து போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்தவும், பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் அமைக்கவிருக்கும் ஐந்து மோடி மருந்தகங்களில் ஒன்று, நூறு நாட்களில் கொடுவாய் பகுதியில் அமைத்திடவும், குடிநீர் பற்றாக்குறையை நீக்கிடவும், திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழகத்தில் ஏற்படும் மின்சாரத் தடைக்கு முழுமையான தீர்வு காணவும், , நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி கவனம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் நமக்குத் தேவை.
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும், ஒரு ரூபாய் கூட லஞ்சம் இல்லாமல் மக்களைச் சென்றடைய வேண்டுமானால், அது பாஜக பாராளுமன்ற உறுப்பினரால்தான் முடியும். கோயம்புத்தூரைப் பொறுத்தவரை, வாக்குகளுக்குப் பணம் கொடுப்பதில்லை என்ற முடிவோடு, மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, பொதுமக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை எதிர் நோக்கி, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் அண்ணாமலை ஆகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவரும் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
சாமானிய மக்களின் சின்னம் தாமரை. தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான சின்னம் தாமரை. வளர்ச்சிக்கான சின்னம் தாமரை. பாரதப் பிரதமர் மோடி அவர்களின் சின்னம் தாமரை எனத் தெரிவித்தார்.