அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி உள்ளது.
உலக நாடுகள் பலவும் விண்வெளி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. தற்போது, தனியார் நிறுவனங்களும், விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றன.
குறிப்பாக, அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிறுவனம், பால்கன்-9 ராக்கெட் மூலம், ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டன. இவை, அதன் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
புளோரிடாவின் கேப் கனாவெரல் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ராக்கெட் மூலம், ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத வகையில், அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.