சிவகங்கை மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏன் அனுமதி வழங்கவில்லை என போலீசாரை நோக்கி நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். அப்போது, தேர்தல் நடைமுறைகளைக் காரணம் காட்டி, அனுமதி தரமுடியாது என போலீசார் வாதிட்டனர்.
இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள், தேர்தலுக்கும், ஜல்லிக்கட்டு போட்டிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாகவே, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
எனவே, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மார்ச் 2-ம் தேதிக்குள் தகுந்த உத்தரவு பிறபிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.