டெல்லியில் நடைபெற்ற சிபிஐ எழுச்சி நாள் நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்
“சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள், கணிசமான குற்றங்கள், நடைமுறை ஆதாரங்களை உள்ளடக்கியது.
இந்தச் சட்டங்கள் குற்றவியல் நடைமுறையின் பல்வேறு அம்சங்களை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) ஆரம்ப பதிவு முதல் இறுதி தீர்ப்பு வரை, குற்றவியல் விசாரணையின் ஒவ்வொரு கட்டமும் முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விரிவான அணுகுமுறை தடையற்ற தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கிறது. விசாரணை, தீர்ப்பு செயல்முறைகளில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை எளிதாக்கும் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்தார்.
புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம், ஜாமீன் உத்தரவு சிறை அதிகாரிகளை சென்றடைவதிலும், சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதிலும் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கும் எனத் தெரிவித்தார்.