தைவான் பூகம்பம் : உதவி எண்கள் அறிவிப்பு!
Mar 15, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைவான் பூகம்பம் : உதவி எண்கள் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தைவானில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்ய, அவசர உதவி எண்ணை இந்திய தைப்பே சங்கம் அறிவித்துள்ளது.

தைவான் தலைநகர் தைப்பேவில், இந்திய நேரப்படி இன்று காலை 5.28 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த பூகம்பம் பூமிக்கடியில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு, தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பூகம்பத்தால், கிழக்கு ஹுவாலியன் உட்பட பல்வேறு நகரங்களில், கட்டடங்கள் குலுங்கின. சில கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த பூகம்பத்தால், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மியாகோ மற்றும் யேயாம தீவுகளில் அலைகள் உயரே எழும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், ஜப்பானின் ஒரு சில பகுதிகளிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும், பிலிப்பைன்ஸ் பகுதிகளிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில்,  நிலநடுக்கத்தை தொடர்ந்து  தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்ய, அவசர உதவி எண்ணை இந்திய தைப்பே சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, தைவானில் உள்ள இந்தியர்கள் உதவிக்கு 0905247906 என்ற எண்ணிலும், ad.ita@mea.gov.in என்ற மின்னஞ்சலிலும், தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை பின்பற்றுமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: earth quaketaiwantaipeitaiwan earthquake disasteremergency helpline
ShareTweetSendShare
Previous Post

 தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு இன்று பிறந்த நாள்!

Next Post

2024 ஐபிஎல் : புள்ளி பட்டியல்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies