இந்திய கிரிக்கெட் வீரரும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரருமான நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்துகொண்டார்.
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளரான யாக்கர் கிங் நடராஜனின் பிறந்தநாள் இன்று. இவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலந்துகொண்டார்.
இந்தியாவில் தற்போது ஐபிஎல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நடராஜன் சன் ரைசஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நடராஜன், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் நாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ள லீக் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது.
அப்போட்டிக்காக சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத்தில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், சன் ரைசர்ஸ் அணி வீரர் நடராஜன் நள்ளிரவில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.
சன் ரைசஸ் ஐதராபாத் அணி தங்கியிருந்த அதே ஹோட்டலில் நடிகர் அஜித் குமாரும் தங்கி இருந்த நிலையில், அவர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அஜித்துக்கு நடராஜன் கேக் ஊட்டிவிட்டடுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நடராஜனுக்கு அஜித் கேக் ஊட்டியுள்ளார். இ,ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனும் கலந்துகொண்டுள்ளார்.