அடுத்த ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. . இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளன.
இதில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் என்றே சொல்லலாம்.
ஏனெனில் சென்னை அணியில் தோனி இருப்பதாலும், மும்பை அணியில் ரோகித் சர்மா இருப்பதாலும், பெங்களூரு அணியில் விராட் கோலி இருப்பதாலும் இந்த மூன்று அணிகள் பெரிய ரசிகர் பட்டாளமே கொண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மும்பை அணியில் உள்ள ரோகித் சர்மா அந்த அணியை விட்டு வேறு அணிக்கு போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த வருடம் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்றது. அந்த ஏலத்திற்கு முன்பே குஜராத் அணியில் இருந்து ஹர்டிக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்ப வந்ததாகவும் ஹர்டிக் பாண்டியா தான் கேப்டன் என்றும் அறிவிப்பு வந்தது.
மேலும் இது ரோகித் ஷர்மாவுக்கே தெரியாது என்றும் அணியில் யாரிடமும் சொல்லலாம் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளில் மூன்றிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.
இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ரோகித் ஷர்மாவிடம் கொடுத்ததகவும் ஆனால் அவர் அந்த பொறுப்பை ஏற்க மறுத்ததாகவும் தெரிகிறது. மேலும் அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து வேற அணிக்காக விளையாடப் போவதாக அவர் கூறியதாக கூறப்படுகிறது.