ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு :  என்ஐஏ புதிய தகவல்!
Aug 13, 2025, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு :  என்ஐஏ புதிய தகவல்!

Web Desk by Web Desk
Apr 5, 2024, 07:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்படும் முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)இன்று அறிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என என்ஐஏ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக என்ஐஏ தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

pic.twitter.com/SLJgVBPISA

— NIA India (@NIA_India) April 5, 2024

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது பெயர் முசாவிர் ஹூசைன் சாஹிப். இந்த சதிச் செயலில் உடந்தையாக இருந்தவர் அப்துல் மதீன் தாஹா. இருவருமே கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு உதவிய சிக்மங்களூருவின் கால்சா பகுதியைச் சேர்ந்த முசாம்மில் ஷரீப் என்பவர் கடந்த மார்ச் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தலைமறைவான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 18 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. மேலும், தலைமறைவான ஒவ்வொரு குற்றவாளி குறித்தும் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படும் என 29.03.2024 அன்று அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆதாரங்கள் மற்றும் தகவல்களை சேகரிக்க தலைமறைவான மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களின் கல்லூரி மற்றும் பள்ளி நண்பர்கள் உட்பட அறிமுகமானவர்கள் அனைவரையும் வரவழைத்து என்ஐஏ விசாரித்து வருகிறது.

வழக்கானது பயங்கரவாத சம்பவம் என்பதால், சாட்சிகளின் அடையாளம் குறித்த எந்தத் தகவலும் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதோடு, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம். எனவே, தலைமறைவான குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய அனைவரின் ஒத்துழைப்பையும் என்ஐஏ கோருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Rameswaram Cafe Blast: Person Identified! - NIA information
ShareTweetSendShare
Previous Post

ஜனநாயகத்தை படு குழியில் தள்ளும் அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

Next Post

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பிரதமராக வரவேண்டும் : மக்கள் முடிவு!

Related News

ஜம்மு காஷ்மீர் : சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏந்தி யாத்திரை!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரி : கருணைக்கொலை செய்யக்கோரி முதிய தம்பதியர் கோரிக்கை!

சென்னை : ஒலிப்பெருக்கியின் சத்தத்தை குறைக்க சொன்ன போலீசாருடன் வாக்குவாதம்!

சட்டம் – ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் பதுங்குவது ஏன்? – இபிஎஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மின் விபத்துக்களால் அகால மரணங்கள் தொடர்வதை பொறுத்துக் கொள்ள முடியாது – நயினார் நாகேந்திரன்

சொத்து வரி முறைகேடு – கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

காலாவதியான, கருணாநிதி காலத்து வார்த்தை விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்வது நல்லது – அண்ணாமலை

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies