ஜனநாயகத்தை படு குழியில் தள்ளும் அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது என மக்கள் கருதுகிறார்கள்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.
சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும், 60 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட போது ஏன் இதனை செயல்படுத்தவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ராணுவ சேர்க்கைக்கான அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும், இந்த திட்டத்தின் மூலம் அநேக பேர் இராணுவத்தில் சேர்ந்துள்ளனர், அப்படி இருக்க இதனை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம், ஏன் ஏழை மாணவர்கள் மருத்துவம் மற்றும் உயர் கல்வி படிக்க கூடாது என்ற முடிவா? அரசியல் கட்சித் தலைவர்களின் கல்லூரிக்கு பணம் சேர்க்கவா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
10 ஆண்டுகளில் பாஜக கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்கள் திரும்பபெறப்படும், பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளது, மீண்டும் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் அதிகரிக்கவா இந்த அறிவிப்பு என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்படியாக ஜனநாயகத்தை படு குழியில் தள்ளும் அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது என மக்கள் கருதுகிறார்கள்.