ஐபிஎல் தொடரின் 18-வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் சன் ரைசஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துக் கொண்டுள்ளன.
இந்த தொடரின் 18-வது போட்டி இன்று ராஜீவ் காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகள் விளையாடவுள்ளனர்.
இதுவரை இவ்விரு அணிகளும் 19 போட்டிகளில் விளையாடிவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளிலும், சன் ரைசஸ் ஐதராபாத் அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல் ஐதராபாத் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் மைதானத்தில் அதிகபட்சமாக 223 ரன்களும் குறைந்தபட்சமாக 132 ரன்களும் எடுத்துள்ளது.
சன் ரைசஸ் ஐதராபாத் அணி ஐதராபாத் மைதானத்தில் இதுவரை 52 போட்டிகளில் விளையாடிவுள்ளது. இதில் 31 போட்டிகளில் வெற்றியும், 20 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
அதேபோல் சன் ரைசஸ் ஐதராபாத் அணி அந்த மைதானத்தில் அதிகபட்சமாக 277 ரன்களும், குறைந்தபட்சமாக 96 ரன்களும் எடுத்துள்ளனர்.
மேலும் இந்த போட்டியில் 56% சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் என்றும், 44% சன் ரைசஸ் ஐதராபாத் அணி வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.