கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதி மக்களவை உறுப்பினர் நடிகை சுமலதா, பாஜகவில் இன்று இணைந்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் பிஎஸ் எடியூரப்பா, மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால், முன்னாள் முதல்வர் டி.வி.சதானந்த கவுடா உள்ளிட்டோர் முன்னிலையில் நடிகை சுமலதா பாஜகவில் இணைந்தார்.
அப்போது மாண்டியா மாவட்டத்தின் விரிவான வளர்ச்சியே எனது அடிப்படை மந்திரம். மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கையில் பாஜகவில் இணைவதாக சுமலதா கூறினார்.
அத்துடன் மாண்டியா தொகுதியில் தான் செய்த பணிகள் குறித்த தகவல்களை தனது எக்ஸ் பக்கத்தில் சுமலதா இன்று பகிர்ந்துள்ளார்.
Greetings to all,
I feel privileged to share the milestones we’ve reached and the development we’ve embarked upon for the Namma Mandya Lok Sabha constituency, fueled by Swabhimani Mandya People’s unwavering support and cooperation. pic.twitter.com/t0aMms3CgH
— Sumalatha Ambareesh 🇮🇳 ಸುಮಲತಾ ಅಂಬರೀಶ್ (@sumalathaA) April 5, 2024
நடிகை சுமலதா எம்.பி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர் நடிகை சுமலதா. இந்த தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார். இதனால் மாண்டியா மருமகள் என்று தொகுதி மக்களால் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.