எக்ஸ் வலைதளத்தில் பிரபலமாக திகழும் புளூடிக் பயனாளர்கள் சிலருக்கு எலான் மஸ்க் இலவச சலுகை அறிவித்து உள்ளார்.
சமூக வலைதள பக்கங்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் பொய் கணக்குகளும் அதிகரித்து வருகிறது. அதிலும் சமூக வளைத்தபக்கத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் வாதிகள், விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் பயன்படுத்துகின்றனர்.
அவர்களை போன்று பொய் கணக்குகளை உருவாக்கி அவர்கள் கூறியதாக பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனாலே பிரங்களுக்கு ப்ளூ டிக் என்பது கொண்டுவரப்பட்டது.
இந்த ப்ளூ டிக் எலான் மஸ்கின் எக்ஸ் வலைதள பக்கத்திலும் கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு தனியாக சந்தா செலுத்த வேண்டும்.
இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் பிரபலமாக திகழும் புளூடிக் பயனாளர்கள் சிலருக்கு எலான் மஸ்க் இலவச சலுகை அறிவித்து உள்ளார்.
பணம் கட்டாத சிலருக்கு புளூடிக் குறியீடு வந்ததை பார்த்து அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 2,500 பிரபலமான பயனாளர்களுக்கு எலான் மஸ்க் இந்த சலுகையை அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.