2024 மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனையொட்டி, வாக்களர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையமும், தனியார் அமைப்புகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்காக, கலைநிகழ்ச்சி, நாடகம் மற்றும் திரைப்படம் எனப் பல்வேறு திசைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விலங்கையம்மன் கோவில் பகுதியில், தேசிய வாக்காளர் பேரவையைச் சேர்ந்தவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் தவறாமல் வாக்களிக்கவேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டனர். அதுபோல, தேசப் பற்றும், தெய்வீகப் பற்றும் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனிடையே, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்டுத்திக் கொண்டு இருந்த தேசிய வாக்களர் பேரவை நிர்வாகிகளை திமுக கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுழ்ந்து நின்று கொண்டு ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்திலும் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.