ராஜஸ்தான் பெண்களை சிறப்பிக்கும் விதமாக நாளைய போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவித்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துக் கொண்டுள்ளன.
இதில் நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பிங்க் நிற ஜெர்சியில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெண்களை கௌரவிக்கும் விதமாக இந்த முடிவினை எடுத்திருப்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜஸ்தான் பெண்களை சிறப்பிக்கும் விதமாக நாளைய போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவித்துள்ளது.