பங்களாதேஷ் மீனவர்கள் 27 பேரை மீட்ட இந்திய கடலோர காவல்படை, அவர்களை பங்களாதேஷ் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்தது.
இந்தியக் கடலோரக் காவல்படை 2024, ஏப்ரல் 4 அன்று கடலில் மீன்பிடி படகில் தத்தளித்த 27 பங்களாதேஷ் மீனவர்களை மீட்டது.
ஏப்ரல் 4 அன்று காலை 11.30 மணியளவில், இந்தியா-பங்களாதேஷ் சர்வதேச கடல்சார் எல்லைக் கோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பலான அமோக், பங்களாதேஷ் மீன்பிடி படகு சாகர் II இந்தியக் கடல் எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டது. பின்னர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல்படை, அவர்களை மீட்டனர்.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்தப் படகில் கடந்த 2 நாட்களாக ஸ்டீயரிங் கியரில் பழுது ஏற்பட்டு, அதில் இருந்தவர்கள் தத்தளித்து இருந்தனர். படகு இந்திய கடல் எல்லைக்குள் கவிழ்ந்ததும் தெரியவந்த நிலையில் இந்தப் படகில் இருந்த 27 மீனவர்கள் இருந்தது தெரிய வந்தது.
இதற்கிடையே, கொல்கத்தாவில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படை பிராந்திய தலைமையகம் பங்களாதேஷ் கடலோர காவல்படையுடன் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து அவர்களுக்குத் தகவல் அளித்தது.
பங்களாதேஷ் கடலோரக் காவல்படைக் கப்பல் கமருஸ்ஸமான், படகை இழுத்துச் செல்வதற்காக பங்களாதேஷ் கடலோரக் காவல்படையால் நிறுத்தப்பட்டது. பின்னர் ஏப்ரல் 4 அன்று மாலை 6.45 மணியளவில் பங்களாதேஷ் மீனவர்களையும் அவர்களின் படகையும் இந்தியக் கடலோரக் காவல்படை, பங்களாதேஷ் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைத்தது.