சன் ரைசஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ், தோனி களமிறங்கிய போது ரசிகர்கள் கொடுத்த சத்தமான ஆரவாரத்தை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை என ஆச்சரியமடைந்தார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரின் 18-வது போட்டி நேற்று ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகள் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது.
இதை தொடர்ந்து களமிறங்கிய சன் ரைசஸ் ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்கள் விழிப்பிற்கு 166 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்த பின்னர் சன் ரைசஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் பேட்டியளித்த போது, தோனி களமிறங்கிய போது ரசிகர்கள் கொடுத்த சத்தமான ஆரவாரத்தை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை எனக் கூறினார்.
இதுகுறித்து அவர், இந்த மைதானத்தில் போட்டி செல்ல செல்ல மெதுவாக இருந்தது. சிவம் துபே ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடினார். அதனால் அவருக்கு எதிராக நாங்கள் ஸ்லோ கட்டர்களை வீச விரும்பினோம். அந்த வகையில் அவரையும் வீழ்த்தி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினோம்.
முதலில் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிகளைப் பெறுவது தான் முக்கியம். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவுலர்கள் பந்துவீச விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு அவர்கள் தற்போது அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
இந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவும் மிகச் சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக தோனி பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ரசிகர்கள் கொடுத்த சத்தமான ஆரவாரத்தை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை” என்று கூறினார்