அசாமில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற சென்ற அம்மாநில முதல்வர் மேடையின் நின்றவாறு நடனம் ஆடி வாக்கு சேகரித்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் சுமார் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அசாமில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், ஜோர்கட் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தோபோன் குமார் கோகோயை ஆதரித்து பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பங்கேற்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அசாம் மாநிலத்தின் புகழ் பெற்ற பாடல் இசைக்கப்பட்டது. அந்த பாடலுக்கு கைகளை தட்டியாவேறே மேடையில் நின்றபடி முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உற்சாகமாக நடனம் ஆடினார்.
2014 மக்களவைத் தேர்தலில், அசாமில் உள்ள 14 இடங்களில் 7 இடங்களை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) தலா மூன்று இடங்களைக் கைப்பற்றின. 2019 தேர்தலில் பாஜக 9 இடங்களில் வெற்றி பெற்றது.