பெங்களூருவில் 120 அடி உயரம் கொண்ட தேரை வடம்பிடித்து இழுத்து வந்தபோது எதிர்பாராத விதமாக அந்த தேர் சரிந்து விழுந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஹஸ்கூர் என்ற இடம். இங்கு ஸ்ரீ மதுரம்மா திருக்கோவில் அமைந்திருக்கிறது.
இந்த கோவில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது, இழுக்கப்படும் தேர் மிகவும் வித்தியாசமான முறையிலும், பிரமாண்டமாகவும், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோவிலில் தேர், பல அடுக்குகளைக் கொண்ட, உயரமான கட்டிட அமைப்பு போல காட்சி தரும் . சுமார் 120 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தரும் இந்த தேர், சுமார் 20 அடுக்குகளைக் கொண்டுவுள்ளது.
இந்த ஆலயத் தேர் திருவிழாவின் போது, இதே போல இன்னும் சில பிரமாண்ட தேர்களும் வலம் வரும். இந்நிலையில் இந்த வருடத்தின் திருவிழா இன்று ( 6.4.2024 ) நடைபெற்றது.
இந்த திருவிழாவில்10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 120 அடி உயரம் கொண்ட தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த தேர் சரிந்து கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக அதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும், காயமும் ஏற்படவில்லை.
பின்னர் டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் தேர் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.