கோடை விடுமுறையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, தெற்கு ரயில்வே சார்பில், பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – நாகை இடையே, அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, நாகர்கோவிலில் இருந்து இன்று மற்றும் வரும் 21-ஆம் தேதி மாலை 5:45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06019) மறுநாள் மதியம் 12:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மறுமார்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 8 மற்றும் 22 ஆகிய தேதிகளில், மதியம் 3:10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06020) மறுநாள் காலை 8:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இதேபோல், நாகர்கோவிலில் இருந்து வரும் 14 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாலை 5:45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06021) மறுநாள் மதியம் 12:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மறுமார்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 15 மற்றும் 29 ஆகிய தேதிகளில், மதியம் 3:10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06022) மறுநாள் காலை 8:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.