2024 ஐபிஎல் தொடரின் 20-வது போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்மை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரின் 20-வது போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் விளையாடியவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 முறையும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல் மும்பை வான்கடே மைதானத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 9 போட்டிகளில் விளையாடிவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 முறையும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை மும்பை வான்கடே மைதானத்தில் 79 போட்டிகளில் விளையாடிவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 48 போட்டிகளில் வெற்றியும் 30 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டி சமனிலும் முடிந்துள்ளது.
அதேபோல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி இதுவரை மும்பை வான்கடே மைதானத்தில் 17 போட்டிகளில் விளையாடிவுள்ளது. இதில் டெல்லி அணி 6 போட்டிகளில் வெற்றியும் 11 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
மேலும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 60% வெற்றி பெறும் என்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 40 % வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.