“நாட்டின் உள்கட்டமைப்புத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை நெடுஞ்சாலைத் துறை, விண்வெளித்துறை, இரயில்வே துறை, தொழில்துறை பொதுசுகாதாரம் எனப் பல்வேறு துறைகளில் கடந்த 10 ஆண்டுகளில் நாம் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம்” என ‘ஜோஹோ’ (zoho) நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்து, ஜோஹோ’ (zoho) நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு மிகச் சரியான பதிலைத் தந்துள்ளார்.
1.இத்தனை காலமாக நம் நாட்டில், அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளிடம் சொத்து குவிப்பு என்பது எளிதாக இருந்து வந்தது. நேர்மையான பிரதமர் கடந்த 10 ஆண்டுகளாக நமக்கு கிடைத்திருக்கிறார். அரசியல் எதிரிகளால் கூட தனிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியாத ஒரு பிரதமர் நமக்கு இருக்கிறார். மோடியைப் போலவே அவரது அமைச்சர்களும் நேர்மையாக உள்ளனர்.
2. ரயில்வே, சாலைகள், விமான நிலையங்கள், தொழிற்சாலைகள், கழிவறைகள் என பல துறைகளில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம்.
What is at stake in this election:
1. For so long, our country simply got used to politicians in power amassing wealth. For the last 10 years, we have a Prime Minister who not even opponents can accuse of personal corruption. Likewise with all his cabinet colleagues.
2. We…
— Sridhar Vembu (@svembu) March 30, 2024
3. இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும்போது, நான் நம்பிக்கை உணர்வை உணர்கிறேன். என்னைப் போன்ற 55 வயது இந்தியருக்கு இது புத்துணர்ச்சி அளிக்கிறது, மேலும் தனியார் துறையும் மிகவும் உற்சாகமாக உள்ளது. இந்த சுறுசுறுப்பைக் கண்டு நான் தனிப்பட்ட முறையில் R&Dயில் கடினமாக உழைக்கத் தூண்டினேன்.
4. இந்தியா இப்போது மரியாதையுடன் நடத்தப்படும் ஒரு சட்டபூர்வமான எழுச்சிமிக்க சக்தியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது,
இந்தக் காரணங்களுக்காக நான் நமது பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். கவனமாக வாக்களிப்போம் என தனது எக்ஸ் பதிவில் ஜோஹோ’ (zoho) நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.