முப்படைகளின் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் தலைமையில் நாளை நடைபெறுகிறது.
முப்படைகளின் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேம்படுத்துவது தொடர்பான புதிய யோசனைகள், முன்முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதை நோக்கமாகக் கொண்ட ஆலோசனை கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் தலைமையில் இந்த ஒரு நாள் மாநாடு நடைபெறும்.
முப்படைகளின் பன்முக செயல்பாடுகளுக்கு ஏதுவாக கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. கூட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் நடத்தப்படும் இந்த மாநாடு, முப்படைகள் தொடர்பான நிறுவனங்கள், இராணுவ விவகாரங்கள் துறை, ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்களின் தலைமையகம் மற்றும் முப்படைப் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் மாநாடாக இந்த சிந்தனைப் பகிர்வு மாநாடு அமைந்துள்ளது. பலரும் இதில் தங்களது அனுபவத்தின் அடிப்படையில், கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்த பரிந்துரைகளை வழங்குவார்கள்.