புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிறுவி தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து புத்துயிர் கொடுத்திருப்பது நமது பாஜக அரசு ஆகும் எனத் தேசிய தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19-ந்தேதி டைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிதம்பரம், கரூர், விருதுநகர் தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்தார். இதற்காக நேற்று இரவு அவர் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். 3 தொகுதிகளுக்கும் அவர் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியது,
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், காசி-தமிழ்ச் சங்கத்தை நிறுவியதன் மூலம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக அம்சங்களில் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருகிறோம்.
வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான நாகரீக தொடர்புகளை மேம்படுத்துகிறோம். கரூர் மக்கள் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டதன் மூலம் பா.ஜ.க.வுக்கு கரூர் மக்கள் ஆதரவு இருப்பது தெரிந்தது.
“மீண்டும் ஒரு முறை மோடி அரசு” என்ற மந்திரத்தை முன்வைத்து வரும் தேர்தலில் மீண்டும் தாமரை மலர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உறுதியாக பதிந்திருப்பது தெரிகிறது எனத் தெரிவத்தார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தியாயினிக்கு வாக்கு சேகரித்து அரியலூர் அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தில் இன்று (ஏப்.7) நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று உரையாற்றினார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியது,
சனாதன தர்மம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை ஒழிக்க திமுகவும் காங்கிரஸும் செய்த முயற்சிகள், இவற்றின் நம்பிக்கைகள் மீதான திட்டமிட்ட தாக்குதலுடன், தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை கடுமையாக சீர்குலைத்துள்ளது.
இது தமிழக மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிறுவி தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து புத்துயிர் கொடுத்திருப்பது நமது பாஜக அரசு ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், தமிழகத்தின் வளர்ச்சியால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உறுதியுடன் ஆதரிக்க தமிழகம் முடிவு செய்துள்ளது என்பதை பொதுமக்களின் உற்சாகம் உறுதி செய்கிறது. வரும் தேர்தலை “வளச்சியடைந்த பாரதம்” என்ற பிரச்சாரத்தோடு எதிர்கொள்வோம்! எனத் தெரிவித்தார்.