ஐபிஎல் தொடரின் 20-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரின் 20-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்களை எடுத்துள்ளது.
இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி ரன்களை எடுத்தனர். இதில் ரோகித் சர்மா 3 சிக்சர்கள், 6 பௌண்டரீஸ் என மொத்தமாக 27 பந்துகளில் 49 ரன்களை எடுத்து அரைசதத்தை தவறவிட்டார்.
பின்னர் களமிறங்கிய சூர்யா குமார் யாதவ் தான் சந்தித்த 2வது பந்தில் டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் 42 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 3 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என 33 பந்தில் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் அதிரடியாக விளையாடி அணிக்கு பெறும் உதவியாக இருந்தனர். கடைசி ஓவரில் மட்டும் 32 ரன்கள் எடுக்கப்பட்டது.
மொத்தமாக டிம் டேவிட் 2 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 21 பந்துகளில் 45 ரன்களை எடுத்தார். அதேபோல் ஷெப்பர்ட் 3 பௌண்டரீஸ் மற்றும் 4 பௌண்டரீஸ் என மொத்தமாக 10 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்களை எடுத்துள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் அதிகபட்சமாக அக்சர் படேல் மற்றும் அன்ரிச் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதேபோல் கலீல் அகமது 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 235 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.