ராஜபாளையத்தில் இன்று மாலை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாகன பேரணி மேற்கொள்ளவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாகன பேரணியை முன்னிட்டு ராஜபாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தென்காசி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாலை ராஜபாளையத்தில் வாகன பேரணி மேற் கொள்கிறார்.
இன்று மாலை 5 மணிக்கு ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் முதல் பஞ்சு மார்க்கெட் வரை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகன பேரணி நடத்தி, தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக ராஜ்நாத் சிங் வாக்கு சேகரிக்கிறார். இதையடுத்து ராஜபாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.