உத்தரபிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் முன்னிலையில், முன்னாள் டிஜிபி விஜய் குமார் தனது மனைவியுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். மேலும், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பாஜகவில் இணைந்தனர்.
உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகளை செய்து வருகிறார். மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கு தொடர்ந்து, பணியாற்றி வருகிறார்.
இதன் காரணமாக, மாற்று கட்சியினர் உட்பட பலர் அம்மாநில பாஜக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் டிஜிபி விஜய் குமார், இன்று பாஜகவில் இணைந்தார்.
உத்தரபிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் முன்னிலையில், முன்னாள் டிஜிபி விஜய் குமார் தனது மனைவியுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மேலும், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பாஜகவில் இணைந்தனர்.
இதுகுறித்து பாஜகவில் இணைந்த விஜய் குமார் கூறியதாவது, “பிரதமர் மோடி மற்றும் முதல்வர் தலைமையில் உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு மேம்பட்டுள்ளது. மக்களுக்காக பணியாற்றுவதற்கு இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று கூறினார்.